பெரம்பலூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 20.09.2024 வெள்ளிக்கிழமை நாளை நடத்த உள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த சிறு, குறு மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை கல்வித்தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் வேலையளிப்பவர் மற்றும் வேலை நாடுநர்கள் தவறாது தங்களது கல்வித்தகுதி மற்றும் சுயவிவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள வாயிலாக பதிவு செய்யவேண்டும். வேலையளிப்பவர்கள் தங்களது Company விவரங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும், தனியார்த்துறை நிறுவனங்களும் வருகின்ற 20.09.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00-மணியளவில் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்