திம்பம் மலைப்பாதையில் இரவில் உலா வந்த யானைகள் கூட்டம்

திம்பம் மலைப்பாதையில் இரவில் உலா வந்த யானைகள் கூட்டம்

Update: 2024-09-19 06:04 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திம்பம் மலைப்பாதையில் இரவில் உலா வந்த யானைகள் கூட்டம் ஈரோடு மாவட்டம், திம்பம் மலைப்பாதையில் உலா வந்த யானைகள் கூட்டம் பீதியில் வாகன ஓட்டிகள். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து திம்பம் மலைப்பாதை உள்ளது. 27 குறுகலான கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த மலைப்பாதையானது திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதையானது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இதனால் திம்பம் மலைப்பாதையை வனவிலங்குகள் அவ்வப்போது கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானைகள் கூட்டம் 18 மற்றும் 19 வது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையில் சாலையோரம் முகாமிட்டுள்ளது. யானை கூட்டத்தை கண்டதும் அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் தங்களுடைய வாகனங்களை சிறிது தூரத்தில் நிறுத்தி விட்டனர். திம்பம் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் தங்களுடைய வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளிடம் தெரிவித்தனர்.

Similar News