நள்ளிரவு மின் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
இரவு தொடங்கி நள்ளிரவு வரை ஏற்பட்ட மின்வெட்டால் நள்ளிரவு வேளையில் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்
காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் பகுதியில் மின்வெட்டால் கொதிப்படைந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நல்லூர் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டு மின்வாரிய அதிகாரிகளுடன் வாக்குவாதம். நீர்வள்ளூர் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு வேளையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற கிராம மக்களால் பரபரப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் வையாவூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கிராமத்தில் மாத கணக்கில் அவ்வப்போது தொடர் மின்வெட்டு தொடர்பான பிரச்சனை தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை முதல் 10மேற்பட்ட முறை மின்வெட்டானது ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.இது குறித்து கேட்டதற்கு மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்தற்கு மின் வயர்கள் செல்லும் வழிதடங்களில் இடையூறாக உள்ள மர கிளைகளை வெட்டி வருவதாக தெரிவித்த நிலையில் தீடிரென நல்லூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் இணைப்பு செல்லக்கூடிய வையாவூர்,ஏனாத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மீண்டும் இரவு 8.30மணிக்கு மின் துண்டிப்பானது ஏற்பட்டிருக்கிறது.ஆனால் 10மணி வரை மின் இணைப்பு வராததால் கொதிப்படைந்த வையாவூர் கிராமமக்கள் நல்லூர் துணை மின் நிலையத்திற்கு நேரில் சென்று அங்கிருந்த மின்வாரிய ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வருகைதந்து தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டபடாமல் சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக வாக்குவாதங்களானது நீடித்தது.இதனையெடுத்து நல்லூர் துணை நிலையத்தில் டிரான்ஸ்பார்மர்கள் பழுது காரணமாக நீர்வள்ளூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படும் நிலையில் நீர்வள்ளூர் துணை மின் நிலையம் அருகே சென்னை-பெங்ஙளூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற சுமார் 50க்கும் மேற்பட்டோரை டிஎஸ்பி மணிமேகலை தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி சுமார் 1மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் மின் இணைப்பு கிடைக்கபெற்ற நிலையிலும் அவ்வப்போது ஏற்படும் இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வு எட்டிட மின்வாரிய அதிகாரிகள் உரிய விளக்கம் அளித்து நிரத்திர தீர்வுக்கு வழிவகுத்திட வேண்டுமென கூறியதையெடுத்து மின்வாரிய அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் 20நாட்களுக்குள் உரிய நிரந்தர தீர்வு கிட்டிட வழிவகுப்பதாக உறுதியளித்தன் பெயரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.
நள்ளிரவு வேளையில் மின்வெட்டால் சாலை மறியலில் ஈடுபட்ட முயன்ற கிராம மக்களால் அப்பகுதியில் பதற்றமான சூழலானது நிலவியது.