சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்

Update: 2024-09-19 09:32 GMT

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பத்தாவது நாளாக சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் -

தொழிலாளர்களின் குடும்பத்தினரிடம் நிர்வாகம் தொலைபேசியில் பணிக்கு திரும்ப அழுத்தம் தருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



 காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், ஊதிய உயர்வு தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 10 வது நாளாக போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊழியர்களின் குடும்பத்தினர் இடையே தொழிற்சாலை மனித வள மேம்பாட்டு நிர்வாக அதிகாரிகள் தொலைபேசியில் வேலைக்கு திரும்ப அழுத்தம் தருவதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டித்து தற்போது முதலமைச்சரின் தனி பிரிவுக்கு கடிதம் மூலம் புகார்களை அனுப்பி வருகின்றனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தொழிலாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News