திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் டெங்கு காய்ச்சலா உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் பகுதியை சேர்ந்த 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு திரும்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம், சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்த உதயகுமார் மகன் கவியரசு (9) என்ற மாணவன் தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி கவியரசுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பெற்றோர்கள் கவியரசை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ சோதனை மேற்கொண்டதில் சிறுவன் கவியரசுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர் உறுதி செய்து உள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுவன் கவியரசை மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கவியரசு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் பொம்மிகுப்பம் சின்ன மாரியம்மன் கோயில் தெரு பகுதியில் கொட்டிவைக்கப்பட்ட குப்பைகளை பஞ்சாயத்து நிர்வாகம் தூய்மை செய்யாமல் குப்பைகழிவுகளை தேக்கி வைத்ததாலே சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பரவி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதே ஊரில் மேலும் 3 பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளதால் அந்த கிராமத்தில் மருத்துவ குழுவினர் முகாம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது பள்ளி சிறுவன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.