இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து மனு..
இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்து மனு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் தமிழக முன்னாள் முதல்வர்,எதிர்கட்சிதலைவர் அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அவரின் இல்லத்தில் சந்தித்து இராசிபுரம் பேருந்து நிலையம் மாறுதல் சம்பந்தமான அனைத்து விபரங்களையும் எடுத்துக்கூறியும் தனி ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நகர் புற வளர்ச்சி துறை அமைச்சர் கேஎன்.நேரு, திமுக மாவட்டச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், இராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், இவர்களின் ஆதாயத்திற்காக இராசிபுரத்தின் வாழ்வாதாரமாக திகழக்கூடிய பேருந்து நிலையத்தை அணைப்பாளையம் பஞ்சாயத்திற்கு மாற்றுவது சம்பந்தமான அனைத்து விவரங்களை எடுத்துக் கூறி இந்த பிரச்சனையில் தாங்கள் தலையிட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இராசிபுரம் மக்களின் சார்பாக மனு அளித்தனர். இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினரின் கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இராசிபுரம் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க குரல் கொடுப்பேன் என்றும் கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவை தெரிவித்தார். மேலும் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் சால்வை அணிவித்தனர்.