பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் செயல் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்தி
சிவகங்கை மாவட்டம், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மிஷன் சக்தி, மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மூலம், பெண் குழந்தை பாதுகாப்பு மற்றும் செயல் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். *****
சிவகங்கை மாவட்டம், சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் மிஷன் சக்தி, மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் மூலம் சமூகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து, பள்ளி கல்வித்துறையுடன் ஒருங்கிணைந்து குழந்தை திருமணம் மற்றும் இளம் வயது கர்ப்பம் அதிகமாக நடக்கக்கூடிய இடங்களில், குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம், குழந்தைகள் மற்றும் மகளிருக்கான உதவி எண், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புதிட்டம், புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டம் ஆகிய தகவல்கள் அடங்கிய பதாகைகளுடன் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, ஒலிபெருக்கியுடன் கூடிய ஊர்தியினை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், இவ்வூர்தியானது மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள பள்ளிகள் மற்றும் பொது இடங்களுக்கு சென்று பொதுமக்கள், எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், திட்ட செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையிலும் இவ்வூர்தியானது சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பிரியதர்ஷினி, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள்) முத்துமாரியப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி மற்றும் துறை சார்ந்த அலுலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.