கோவில் நிலத்தை தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு

சார் பதிவாளர் அலுவலகத்தில் திரண்ட பொதுமக்களால் பரபரப்பு.

Update: 2024-09-19 13:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கோவை மாவட்டம் ஜே கிருஷ்ணாபுரம் சாலைப்புதூர் பகுதியில் அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் உள்ளது.இதன் மதிப்பு சுமார் 12 கோடி ஆகும். இந்த நிலமானது பல்லடம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்ததாகும். இந்த நிலையில் கோவில் நிலத்தை சில தனி நபர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து உள்ளதாக கூறி இன்று சார் பதிவாளர் அலுவலகத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வந்தனர். இந்த நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனி நபர் ஒருவருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் சாலைப்புதூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும் மேலும் அதனை பெயர் மாற்றம் செய்துள்ளதாகவும் உடனடியாக அதிகாரிகள் இந்த பெயர் மாற்றத்தை ரத்து செய்து கோவில் பெயரிலேயே பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News