பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பல்வேறு அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களான வட்டாட்சியர் அலுவலகம், சார்நிலை கருவூலம், கோட்டக் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட 13 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர் சங்க செயலாளர் தில்லையப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள் ஊர் புற நூலகர்கள் எம் ஆர் பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு கால முறை ஊதியம், தொகுப்பு ஊதியம் மதிப்பூதியம் பெரும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும் ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமதி ,ஆறுமுகம்,தேவகி ,சிவராசு ,சந்திரகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இனை செயலாளர் மேகலிங்கம் சிறப்புறையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.