திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மூவர் உயிர் இழப்பு
திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற தந்தை மகன் உட்பட 3 பேர் மின்வெளியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற தந்தை மகன் உட்பட 3 பேர் மின்வெளியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு... நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்தனர் சட்டவிரோதமாக மின்வெளி அமைத்த நில உரிமையாளர் முருகன் என்ற நீதி என்பவர் கைது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே முருகன் என்ற நீதி என்பவர் விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. மலைப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் வருவதை தடுக்க நிலத்தில் சட்டவிரோதமாக மின்வெலி அமைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூக்கனூர் பகுதியை சேர்ந்த சிங்காரம் (வயது 40) இவருடைய மகன் லோகேஷ் (வயது 14) ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் பெருமாபட்டு பகுதியை சேர்ந்த கரிபிரான் (வயது 60) ஆகிய மூன்று பேர் நேற்று இரவு ஏலகிரி மலை பகுதிக்கு வனவிலங்குகளை வேட்டையாட சென்று மீண்டும் வீடு திரும்பிய போது முருகன் என்ற நீதி என்பவருடைய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மிண்வெளியில் சிக்கி பரிதாபமாக மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து குரிசிலாப்பட்டு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற காவல்துறையினர் மூன்று பேர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வனவிலங்குகளை வேட்டையாட எடுத்துச் சென்ற நாட்டு துப்பாக்கியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மின் வேலி அமைத்த முருகன் என்ற நீதி என்பவரை கைது செய்து குரிசிலாப்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிடத்தக்கது