வருமுன் காப்போம் திட்ட முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ

வருமுன் காப்போம் திட்ட முகாமை துவக்கி வைத்த எம் எல் ஏ

Update: 2024-09-22 10:20 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சித்தாமூர் ஒன்றியத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ முகாமினை செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கயப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இம்மாம் இருக்கு சிறப்பு அழைப்பாளராக செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் மு.பாபு, ஒன்றிய பெருந்தலைவர் ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார் இந்த முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதய நோய் ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் மற்றும் தோல் நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் குழந்தையை ஈன்றெடுத்த தாய்மார்களுக்கு குழந்தை பரிசு பெட்டகமும் இலவசமாக வழங்கப்பட்டது மேலும் மாதாந்திரம் மாத்திரை எடுத்துக் கொள்ளும் முதியவர்களுக்கு அவரவர் நோய்க்கு ஏற்ப மாத்திரைகள் அடங்கிய மருந்து பெட்டகமும் வழங்கப்பட்டது இறுதியாக மருத்துவ முகாமினை பார்வையிட்டு பொதுமக்கள் அனைவரும் பொறுமை காத்து மருத்துவம் பெற்று செல்ல வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து கயப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக இலத்தூர் ஒன்றிய செயலாளர் பாபு, மாவட்ட கவுன்சிலர் டைகர்குணா, ஒன்றிய குழு உறுப்பினர் ரேவதிவேதாச்சலம், ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் நிர்மல்குமார், துணைத் தலைவர் புஷ்பா, அரசு மருத்துவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News