காங்கேயத்தில் அதிமுக ஒன்றியம், நகரம் சார்பில் பேரறிஞர் அண்ணாவிற்கு பிறந்த நாள் பொதுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அதிமுக ஒன்றிய நகர கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணாவிற்கு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Update: 2024-09-23 01:52 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள திடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் காங்கேயம், வெள்ளகோவில், முத்தூர் மற்றும் சென்னிமலை மாவட்ட, ஒன்றிய, நகர, கழக நிர்வாகிகள் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய கழக செயலாளர் ஏன்.எஸ்.என். நடராஜ் தலைமை தாங்கினார். காங்கேயம் நகரச் செயலாளர் வெங்கு ஜி. மணிமாறன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் கலந்து கொண்டார். விழாவின் முன்னதாக கலை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. நிகழ்ச்சிக்கு என்.என்.நடராஜ் வரவேற்புரை ஆற்றினார். வருகை தந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் பேசியதாவது: கட்சி நிர்வாகிகள் மற்றும் கூடியிருந்த பொதுமக்களிடையே மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் புகழையும், அண்ணாவின் கொள்கைகள் குறித்தும், அண்ணாவிற்கு பிறகு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்‌ அதன் பிறகு புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் ஆற்றிய கட்சியின் பணிகள் குறித்தும், அதன் பிறகு மீண்டும் ஒரு நம்பிக்கையாக வந்தவர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வரை கட்சியின் வளர்ச்சிக்கு பெறும் பங்கு வகித்து வருகிறார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏழை எளிய குடும்பத்தில் இருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து மருத்துவர்களாக வெளியே வருவதற்கு காரணம் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. ஏழை பெண்கள் தங்களின் திருமணத்திற்கு தாலிக்காக 1/2 பவுன் தங்கம் தந்த ஒரே தலைவி ஜெயலலிதா. இந்த திட்டம் அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டது மிகவும் முக்கியம். கொரோனா என்ற பேரலை வந்து உலக அளவில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அப்போது பொதுமக்களின் உயிரை காப்பாற்ற பெரிய அளவில் முயற்சி எடுத்து, தனது உயிரை பற்றிக் கூட கவலைபடாமல் செயல்பட்டவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அனைத்து தொழில்களும் முடங்கிய நிலையில் அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ. 1000 நிவாரணமும், அதனை தொடர்ந்து பொங்கலுக்கு ரூ. 2500ஐ வழங்கிய பெருமையும் எடப்பாடியை சேரும். பெரும் தோல்விகளிலும் மீண்டும் துடித்தெழுந்த கட்சி அதிமுக. எனவே கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மாபெரும் வெற்றி அடையும். வரும் தேர்தலில் பொதுமக்கள் பெரும் மாற்றத்தை கொண்டு வருவார்கள். அதிமுக கட்சி என்பது தங்கம் போன்றது, ஒவ்வொரு முறையும் சுட்டெரிக்கும் போது தரம் குறையாமல் மேலும் மேலும் மெருகேறும் அதுபோல கண்டிப்பாக அதிமுக அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் என்பது சத்தியம். கலந்து கொண்டவர்கள்: மாவட்ட கழக பொருளாளர் கே.ஜி.கே. கிஷோர்குமார், மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் ஆர். சக்தி வடிவேல், வெள்ளகோவில் ஒன்றிய கழக செயலாளர் எஸ்.என்‌. முத்துக்குமார், சென்னிமலை ஒன்றிய கழக செயலாளர் ஆர். கோபால கிருஷ்ணன், குண்டடம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம்.பி. சண்முக சுந்தரம், வெள்ளகோவில் நகர செயலாளர் டீலக்ஸ் ஆர். மணி, முத்தூர் பேரூர் கழக செயலாளர் எஸ். முத்துக்குமார், சென்னிமலை பேரூர் கழக செயலாளர் ஏ. ரமேஷ், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் எம்.கே. கண்ணுச்சாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் வி. கந்தசாமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டி. ஆர். கோவிந்தசாமி, அம்மா பேரவை துணை செயலாளர் எஸ். இளங்கோ, மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் அப்பு என்கிற பழனிச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ஏ.பி. துரைசாமி, ஒன்றிய அவைத்தலைவர் மைனர் டி.பழனிச்சாமி, ஒன்றிய துணை செயலாளர் ஏ.என். திருச்செந்தில், ஒன்றிய பொருளாளர் டி. பழனிச்சாமி,பொத்தியபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், மாவட்ட பிரதிநிதி பி.பி. இளங்கோ, என்.எஸ்.என்.‌ தனபால், பி.கே‌‌. சண்முகம், தொழில்நுட்ப பிரிவு லோகேஷ் சக்திவேல், எம்.எஸ். அருண்குமார், சிவன்மலை ஊராட்சி தலைவர் துரைசாமி உட்பட மாவட்ட, கழக, ஒன்றிய, நகரத்தை சேர்த்த 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News