தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் முற்றுகை
தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் முற்றுகை
தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் முற்றுகை திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆதி தமிழர் சனநாயக பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுடன் முற்றுகையிட்டு ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் பவுத்தன்தலைமையில் மன அளித்துள்ளனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியம் காடையூர் மற்றும் வட சிண்ணாரி பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வீனம்பாளையம், கல்லாங்காட்டுப்புதூர், பெனங்காளி வலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின அருந்ததிய பொதுமக்கள் பலகட்ட போராட்டத்திற்குப் பிறகு பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு ஈரோடு நில சீர்திருத்த உதவி ஆணையர் உத்தரவுப்படி காடையூர் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கும் வட சின்னாரி பாளையம் கிராமத்தில் 21 பயனாளிகளுக்கும் மொத்தம் 51 பயனாளிகளுக்கு உபரி நிலம் வழங்கப்பட்டது. வந்த நிலம் தற்போது வரை 30 ஆண்டுகளாகியும் இம்மக்களுக்கு விவசாயம் செய்ய நிலத்தை அளவீடு செய்து எனவே விவசாயம் செய்ய உடனடியாக எஃப் பட்டா நகல் வழங்கி உதவும்படி ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் சார்பாக ஆர்டிஓ அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். மேலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆதி தமிழர் சனநாயக பேரவையின் மாவட்ட நிர்வாகி சி.கார்த்திக், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் வி.கே.தேவராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.