மல்லிகை பூவால் அலங்காரம் செய்யப்பட்ட சந்தன குடங்களுடன் மதநல்லிணக்க ஊர்வலம்

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை மலை உச்சியில் 2500 அடி உயரத்தில் உள்ள ஷேக் அப்துல்லாஹ் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனம் பூசும் விழா மும்மதத்தினரும் பங்கேற்று வழிபாடு செய்தனர்

Update: 2024-09-25 12:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நூற்றாண்டுகள் பழமையான பிரான்மலை ஷேக் அப்துல்லாஹ் தர்ஹாவில் இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழாவிற்கான கொடியேற்றம் கடந்த 14-ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஷேக்அப்துல்லா அவுலியா தோப்பு தர்ஹாவிலும்,2500 அடி உயரத்தில் மலை உச்சியில் உள்ள ஷேக் அப்துல்லா ஒலியுல்லாஹ் தர்ஹாவிலும் வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சந்தனம் பூசும் விழாவிற்காக ஷேக் அப்துல்லா தோப்பு தர்ஹாவில் சந்தனங்கள் கரைக்கப்பட்டு மூன்று குடங்களில் நிரப்பி மல்லிகை மலர் அலங்காரம் செய்து கொண்டு வரப்பட்டன. அதனை தொடர்ந்து அனைத்து மதத்தினரும் ஒன்று கூடி துவா ஓதப்பட்டன.துவா ஓதிய பின் பள்ளிவாசல் நிர்வாகிகள் தலையில் சுமந்து சென்று மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு மின்னொளியில் ஜொலித்த சந்தனக்கூடு ரதத்தில் மூன்று சந்தன குடங்கள் இறக்கி வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது அப்போது வழி நெடுகிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதில் ஜந்தூர் கிராமத்தார்கள் அனைத்து சமுதாய மக்கள் பெரியோர்கள் இந்து, முஸ்லீம் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Similar News