கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

Update: 2024-09-25 14:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுராந்தகம் அருகே உள்ள ஊனமலை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அதிகாரி இருக்கும் காந்திமதி மற்றும் உதவியாளர் இருவரை இடமாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் கிராம நிர்வாக அலுவலகம் முற்றுகை செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள ஊனமலை கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் காந்திமதி இவரும் உதவியாளர் பூர்ணிமா ஆகிய இருவரும் உரிய நேரத்தில் வரவில்லை என்றும் சிட்டா பட்டா அடங்கல் போன்ற நகல்களை கேட்டால் லஞ்சம் கேட்பதாகும் அதற்கும் மீறி கேட்டால் VAO தனது செல்போன் மூலம் கேட்பவர்களை போட்டோ எடுத்து காவல் நிலையத்தில் உங்கள் மீது புகார் அளித்து விடுவேன் எனவும் கிராம மக்களை மிரட்டுவதாகவும் அலுவலகத்தை விட்டு வெளியே போ என்று ஒருமையில் கிராம மக்களை பேசுவதும் இதுவரை நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் இவர்கள் பணிக்கு வந்து சேர்ந்த 1.1/2 ஆண்டுகள் ஆண்டு ஆகின்றன.. இதுவரை நடைபெற்ற கிராம கூட்டத்தில் இவர்கள் எந்த கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை எனவும் இவ்வாறு நடந்து கொள்வதால்கிராம நிர்வாக அதிகாரியும் உதவியாளரையும் பணிமாற்றம் செய்யக்கோரி ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இன்று ஊனமலை கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

Similar News