விவசாயிகளை ஆடுகளை கொன்று கிணற்றில் தள்ளி விடுவதாக யூடியூப் சேனலில் பெண் அவதூறு பரப்பிய பெண் மீது புகார்

காங்கேயத்தில் விவசாயிகளே ஆடுகளை கொன்று கிணற்றில் தள்ளி விடுவதாகவும் தெரு நாய்கள் கடித்து ஆடுகள் சாகவில்லை என்று "ஆனந்தி வெங்கட் "யூடியூப் சேனலில் விவசாயிகள் மீது அவதூறு பரப்பிய பெண் மீது புகார் 

Update: 2024-09-26 00:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தெரு நாய்கள் முழுவதையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என திட்டமிட்டு செயல்படுவதாக கூறி திருமதி. ஆனந்தி வெங்கட்" என்பவர் சேனலில் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் -youtube சேனல் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கேயம் காவல் ஆய்வாளரிடம் மனு. காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெறி நாய்கள், விவசாயிகள் வளர்க்கும் ஆடு,கோழிகளை கடித்து கொன்று விடுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும்,விவசாய சங்கங்களும் போராடி வருகின்றனர். மறவம்பாளையம் பஞ்சாயத்து  உட்பட்ட செம்மண்குழிபாளையம் கிராமத்தில் பொன்னுசாமி என்பவர் சுமார் 35 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார் . கடந்த 13ம் தேதி இரவு ஆடுகளை தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்து விட்டு இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை அங்கு சுற்றித்திரிந்த தெரு நாய்கள் பட்டிக்குள் நுழைந்து ஆடுகளை கடித்தும் துரத்தியும் உள்ளது.இதில் தப்பிய செம்மறி ஆடுகள் அங்கிருந்து தெறித்து ஓடிய போது, அருகில் இருந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதில் 17 ஆடுகள் பலியாகியது. இந்த ஆடுகளின் மதிப்பு சுமார் 4 லட்சம் ஆகும். காங்கேயம் அருகே தொட்டியப்பட்டியில் 19ம் தேதி ஆட்டு பட்டியில் 70 செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டது. இந்த செம்மறி ஆடுகளை 4 தெரு நாய்கள் புகுந்து கடித்ததில் 27  செம்மறி ஆடுகள் பலியானது. 10க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம் அடைந்தது. இந்த தகவல் காங்கேயம் பகுதியில் உள்ள விவசாயிகளை கலக்கமடைய செய்தது இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே இறந்த ஆடுகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பின்னர் அரசு அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் யூடியூப் சேனல் நடத்தி வரும் திருமதி.ஆனந்தி என்பவர் அவரது ஆனந்தி வெங்கட் சேனலில் அவதூறு பரப்பும் வகையில் இதனை அசிங்கப்படுத்தும் விதமாக " சமூக வலைதளங்களில் ஒரு தவறான பதிவை பகிர்ந்துள்ளார், இதனை கண்ட பாதிக்கப்பட்ட விவசாய பெருமக்களும், விவசாய சங்கங்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அவரை கண்டித்து இன்று காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவிக்க சென்றனர். டிஎஸ்பி வெளியே சென்ற காரணத்தால் காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தரிடம் விவசாயிகள் சார்பில் பாதிக்கப்பட்ட மோகன் குமார் என்பவர் மூலம் புகார் கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட காங்கேயம் போலீசார் அதற்கு சி எஸ் ஆர் பதிவு செய்து ரசீது வழங்கினர். காங்கேயம் காவல் நிலையத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்தும் அவதூறாக செய்தி வெளியிட்ட ஆனந்தி என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி  புகார் மனு வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Similar News