தோகைமலை சேர்மன் சுகந்தி சசிகுமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

தோகைமலை திமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்பு

Update: 2024-09-26 07:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை பகுதியில் தோகைமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிக்குமார் தலைமையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் கிடைத்ததை கொண்டாடும் வகையில் யூனியன் அலுவலக பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தோகைமலை பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசுகள் வெடித்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பேருந்தில் பயணித்த மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள், தோகைமலை ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Similar News