திருப்பத்தூரில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூரில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

Update: 2024-09-27 07:30 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் ஊறுகாய் விற்றவர்கள் நிதி அமைச்சராக இருக்கிறார்கள் அதே போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக புத்தாக்க திட்டத்தை செயல்படுத்தி எண்டர்பிரைசஸ் அமைத்துக் கொடுத்தால் 3500 நிதி அமைச்சர்களை உருவாக்க முடியும் விவசாயிகள் குறைத்து நாள் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்த விவசாயி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பல்வேறு நிறை குறைகள் குறித்த விவாதங்கள் நடைபெற்று அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த விவசாயி அம்பலூர் அசோகன் என்பவர் திருப்பத்தூர் மாவட்டத்தில் 3500 சுய உதவிக் குழுக்கள் உள்ளன அந்த குழுக்களில் உள்ள பெண்கள் தயாரிக்கும் பொருளை சந்தை படுத்தவோ மதிப்பு கூட்டி விற்பனை செய்யவும் எல்லா மாவட்டத்திலும் இருப்பது போல் நம்முடைய மாவட்டத்திலும் ஊரக புத்தாக்க திட்டத்தை செயல்படுத்தி எண்டர்பிரைசஸ் அமைத்துக் கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுக்கும் பட்சத்தில் ஒரு ஊறுகாய் வியாபாரி நிதி அமைச்சர் ஆனது போல் 3500 நிதி அமைச்சர்களை உருவாக்க முடியும் என்றும் கடுமையான வறட்சியின் காரணமாக யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 89 , 90களில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட கடனுக்கு உத்திரவாதமாக வாங்கப்பட்ட பத்திரங்களை தற்போது வரை எந்த விவசாயிகளுக்கும் திருப்பி கொடுக்கவில்லை இதனால் அந்த நிலத்தை பாகப்பிரிவினை செய்வதற்கோ அல்லது பிள்ளைகளுக்கு எழுதி கொடுப்பதற்கோ முடியவில்லை உடனடியாக விவசாயிகளுக்கு சேர வேண்டிய பத்திரத்தை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பதில் கூறுகையில் உடனடியாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பொழுது விவசாயிகள் கூட்டத்தின் மத்தியில் கரகோஷம் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த விவசாயிகள் நாள் கூட்டத்தில் அரசு துறை சார்ந்த வேளாண்துறை வருவாய் துறை மின்சார துறை காவல்துறை வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்

Similar News