மின்வேலியில் காட்டெருமை சிக்கி பலி
வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின்வேலியில் காட்டெருமை சிக்கி பலி
திண்டுக்கல், நிலக்கோட்டை அருகே மாவூர் அணை சிறுமலை அடிவாரம் பகுதியில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்ட மின்வேலியில் காட்டெருமை சிக்கி பலி. உயிரிழந்த காட்டெருமையை சட்ட விரோதமாக வயல்வெளியில் புதைத்த விவசாயி. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில் சிறுமலை வனசரகர் மதிவாணன் மற்றும் வனத்துறையினர் 15 பேர் கொண்ட குழு காட்டு மாடு புதைக்கப்பட்ட இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தோண்டி காட்டு மாடை எடுத்து பரிசோதனை செய்து பின்னர் அதே இடத்தில் புதைத்தனர். இது தொடர்பாக போஸ் மகன் ராமன்(30) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தற்போது தலைமுறைவாக உள்ள ராமனை தேடி வருகின்றனர்.