ஆமணக்கு விதைகளை பெற விவசாயிகளுக்கு நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் அழைப்பு

பருத்தி, சின்னவெங்காயம் உட்பட சாகுபடியில் வரப்பு பயிராக ஆமணக்கு பயிரிடலாம்,இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பில் ஆமணக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே வரப்பில் மட்டுமல்லாது, தனிப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்.

Update: 2024-09-28 11:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இதுகுறித்து நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது... நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொகுப்பு முதல்நிலை செயல் விளக்க திடல் 2024-25 பருவத்திற்கான ஆமணக்கு விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆமணக்கு ( ஏத்தாப்பூர் 2) சாகுபடி செய்யும் விவசாயிகள் விதைகளைப் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இத்திட்டத்திற்கு ஒரு கிராமத்தில் குறைந்தது ஐந்து விவசாயிகள் இருத்தல் அவசியமாகும். மேலும் விதைகளை வாங்க வரும் விவசாயிகள் தங்களுடைய புகைப்படம், ஆதார் நகல் மற்றும் கம்ப்யூட்டர் சிட்டா நகல் ஆகியவை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம். பருத்தி, சின்னவெங்காயம் உட்பட சாகுபடியில் வரப்பு பயிராக ஆமணக்கு பயிரிடலாம்,இயற்கை வேளாண் இடுபொருட்கள் தயாரிப்பில் ஆமணக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. எனவே வரப்பில் மட்டுமல்லாது, தனிப்பயிராகவும் சாகுபடி செய்யலாம்.மேலும் தொடர்புக்கு முனைவர் சி.சங்கர்,உதவிப் பேராசிரியர் (பூச்சியியல்) 99430-08802 இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Similar News