சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டு நாள் இலவச பல்துறை மருத்துவ முகாம்

சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவமனை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் சார்பில் இரண்டு நாள் இலவச பல்துறை மருத்துவ முகாம்

Update: 2024-09-28 13:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை ஸ்ரீராமசந்திரா மருத்துவ மருத்துவமனை மற்றும் மருத்துவ பல்கலைக்கழக நிறுவனர் என்.பி.வி.ராமசாமி உடையார் நினைவாக அவரது சொந்த ஊரான ராசிபுரத்தில் ஆண்டுதோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செப்.28,29 ஆகிய இரு நாட்கள் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் துவங்கிய இம்முகாமினை மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வெங்கடாஜலம், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். தொடர்ந்து நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி எம்பி மாதேஸ்வரன், திமுக நகர செயலாளர் என். ஆர். சங்கர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இம்முகாமில் கல்லூரி டீன் டாக்டர் கே.பாலாஜிசிங் , மற்றும் மருத்துவர் தணிகாசலம், பங்கேற்றார். இதில் பொதுமருத்துவம் , புற்று நோய் மருத்துவம், கண் மருத்துவம் உள்ளிட்ட இருதய நோய், சிறுநீரக பிரிவு, குழந்தைகள் மருத்துவம், பல் மருத்துவம், கேட்பியல் துறை மருத்துவம் போன்றவற்றின் பல்வேறு துறை மருத்துவர்கள் பங்கேற்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவினர் 150-க்கும் மேற்பட்டோர் இலவச பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் சிறுநீரகம், நரம்பியல்,கண், ஏலும்பு, பல், காது, மூக்கு, தொண்டை போன்ற நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இசிஜி, எக்கோ , புற்றுநோய்க்கான மெம்ம கிராபி பரிசோதனை போன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மருந்து மாத்திரைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. இம்முகாம் ஞாயிற்றுக்கிழமையும் (செப்.29 ) நடைபெறும்.

Similar News