ராசிபுரத்தில் தலைமுறை தலைமுறையாக தொடரும் பாரம்பரிய மாடு தாண்டும் விழா..

ராசிபுரத்தில் தலைமுறை தலைமுறையாக தொடரும் பாரம்பரிய மாடு தாண்டும் விழா..

Update: 2024-09-28 13:31 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புரட்டாசி சனிக்கிழமையொட்டி ராசிபுரம் ஸ்ரீதேவி,பூதேவி சமேத பொன்வரதராஜ பெருமாள் கோயிலில் பக்தர்களை மாடு தாண்டிச்சென்ற விநோத நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புகழ் பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி உற்சவம் நடைபெறுவது வழக்கம். ராசிபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வர். அதனையொட்டி புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமை சேலம் மாவட்டம் எடப்பாடி , கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி, தெக்காடு, முங்கில்காடு, பள்ளிப்பட்டி, காருவள்ளி, சின்னதிருப்பதி, ஜலகண்டாபுரம், குண்டுகாட்டானுர், நாட்டாமங்கலம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பெருமாளை குலதெய்வமாககொண்டவர் 300 க்கும் மேற்ப்பட்டோர் ஒரு சமூகத்தினர் பொன்வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்வாமிக்கு திருக்கொடி வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். அந்த பக்தர்கள் ராசிபுரம் வந்தனர். அதை தொடர்ந்து, ஸ்வாமி திருவீதி உலா செல்வது வழக்கம். இந்நிகழ்ச்சி, தலைமுறை தலைமுறையாக நடந்து வருகிறது. அதன் பின்னர் முக்கிய நிகழ்சியான பக்தர்கள் மீது மாடு தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை யொட்டி கோவில் முன்பாக மலர் மாலைகள் அணிவிக்கப்பட்ட மாடு அழைத்து வரப்பட்டது. மாடு வரும் வழியில் ஆண், பெண் பக்தர்கள் தரையில் படுத்திருந்தனர். அவ்வாறு படுத்திருந்த பக்தர்களை மாடு தாண்டி செல்லும்போது அதன் கால் பக்தர்கள் மேல் படாமல் சென்றால் வாக்கு பலிதமாகும் என்பது தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அவ்வாறு மாடு தாண்டும் போது கால் வாக்கு கேட்பவர் மீது பட்டு விட்டாலோ அல்லது தாண்டாமல் நின்று விட்டாலோ, தங்களது வீட்டில் ஏதாவது கெடுதல் நடக்கும் என பக்தர்கள் அஞ்சுவர். இதன் பின்னர் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமிதரிசனம் செய்து விரதத்தை முடித்து கொண்டு உணவு அருந்தினர். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.. அர்ச்சகர்கள் சந்தானம், ஸ்ரீதர் குழுவினர் தம்பதிசமேத பொன் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை செய்தனர். அப்போது பக்தர்கள் தொழில் மற்றும் குழந்தை பாக்கியம் ,கல்வி, நோய்நொடிகள் நீங்க வாக்குக்கேட்டனர். நிகழ்ச்சியில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி, பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த மாடு தாண்டும் வினோத விழாவில், ராசிபுரம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் நாமக்கல், சேலம் மாவட்டத்தை சேர்ந்த, பக்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்..

Similar News