கரூரில் சட்ட விரோத மது விற்பனை ரூ.39,000 மதிப்பு மது பாட்டிலகள் பறிமுதல்.

கரூரில் சட்ட விரோத மது விற்பனை ரூ.39,000 மதிப்பு மது பாட்டிலகள் பறிமுதல்.

Update: 2024-09-28 13:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் சட்ட விரோத மது விற்பனை ரூ.39,000 மதிப்பு மது பாட்டிலகள் பறிமுதல். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சட்ட விரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் செப்டம்பர் 27ஆம் தேதி காலை 5 மணி முதல் காலை 7:30- மணி வரை ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதில் பெண் காவல் உதவி ஆய்வாளர் சுபாஷினி தெற்கு காந்திகிராமம் பகுதியில் செயல்படும் ஜில்ஜில் பார் அருகே சோதனை மேற்கொண்டார். அப்போது, அந்த சோதனையில் புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை, மேல தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணி வயது 40 என்பவர் சட்டவிரோதமாக அங்கு மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 111 குவாட்டர் மது பாட்டில்களும், 32 பீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தாந்தோணி மலை டாஸ்மார்க் அருகே நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது புதுக்கோட்டை மாவட்டம் ,கறம்பக்குடி அருகே உள்ள மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் சட்டவிரோத மது விற்பனை ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் விற்பனைக்கு வைத்திருந்த 103 குவாட்டர் மது பாட்டில்களும் 11 பீர் பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக பாலசுப்பிரமணி மற்றும் ரங்கராஜன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூபாய் சுமார் 39 ஆயிரம் இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டது.

Similar News