சிறப்பு மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.06 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Update: 2024-09-28 11:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.06 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் விதமாக அனைத்து வட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் முகாம் நடத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களில் புதிய அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை உதவித்தொகை, வங்கி கடன், ஆதார் அடையாள அட்டை, காதொலிகருவிகள், உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இம்முகாம்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இன்றைய தினம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தலா ரூ.2,780/- மதிப்பில் 2 மாற்றுத்திறனாளிக்கு காதொலி கருவிகள், 1 மாற்றுத்திறனாளிக்கு பேருந்து பயண அட்டை, 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.65,600/- மதிப்பில் செயற்கை கால், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1.85 இலட்சம் மதிப்பில் செயற்கை கால், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.41,000/- மதிப்பில் செயற்கை கால், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,349/- மதிப்பில் திறன் பேசி, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.06 இலட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகள் என மொத்தம் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6.31 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் அடையாள அட்டை, 4 மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டைகள், 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.75 இலட்சம் கடனுதவி, கூட்டுறவுத்துறை சார்பில் 23 மாற்றுத்திறனாளிகளுக்க ரூ.11.00 இலட்சம் கடனுதவிகள் என மொத்தம் 92 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19.06 இலட்சம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இம்முகாமில் இராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, இணைபதிவாளர், கூட்டுறவு சங்கங்கள் க.பா.அருளரசு, இளநிலை மறுவாழ்வு அலுவலர் பிரகாஷ், மாற்றுத்திறனாளிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News