தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்

பல்லடம் நகர திமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்

Update: 2024-09-29 13:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் இதனை முன்னிட்டு நாடு முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர திமுக சார்பில் பட்டாசு வெடித்தும்,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றதை உற்சாகமாக கொண்டாடினர்.பல்லடம் நகர திமுக செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமையில் என்.ஜீ.ஆர் சாலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமப்பாளர் ராஜசேகர்,நகர துணைச்செயலாளர் வேலுமணி மற்றும் நகராட்சி வார்டு உறுப்புனர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு உதயாநிதி ஸ்டாலின் பதவி ஏற்ப்பை கொண்டாடினர் பெரியார், அண்ணா, கலைஞர் புகழ் ஓங்கவும் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயாநிதி ஸ்டாலின் நீடூழி வாழ்ந்து சிறப்பான ஆட்சி வழங்கவும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Similar News