எடப்பாடி பேருந்து நிலைய கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பயணிகள் பெரும் அவதி
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் மற்றும் சாலையோர கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது...
கடந்த 2023 ஆம் வருடம் சேலத்தில் அரசு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்... அப்போது எடப்பாடியில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணியை சேலத்தில் காணொளி காட்சியின் மூலம் தொடங்கி வைத்தார்.... அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகளை 2023 ஆகஸ்ட் 28ஆம் தேதி நகர மன்ற தலைவர் பாஷா துவக்கி வைத்தார் இந்த புதிய பேருந்து நிலையம் 175 நாட்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என குத்தகைதாரர் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பூமி பூஜை போட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகியும் பணிகள் முடிவடையாமல் தற்போது வரை ஆமை வேகத்தில் நடைபெற்ற வருகிறது. இதனால் பல்வேறு ஊர்களில் இருந்து பேருந்துகளில் எடப்பாடி பேருந்து நிலையம் வந்து இறங்கும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தினந்தோறும் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்தப் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.