பல்லடம் தாலுகா அலுவலகத்தில்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
கருப்பண்ணசாமி நகர் 37 குடும்பங்களுக்கு பட்டா தயார்
பல்லடம் அருகே மாணிக்காபுரம், கருப்பன்னசாமி நகர் பகுதியில் குடியிருந்து வரும் 31 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிட வேண்டுமென கேட்டு மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த 3 வருட காலமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. கிராம சபை கூட்டம், ஜமா பந்தி, தாசில்தாரர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுப்பது, தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என தொடர்ச்சியாக பல்வேறு வகையில் முயற்சி செய்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் இருதினங்களில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கபட்டது. ஆனால் இன்று வரை பட்டா வழங்க வில்லை. இன்று 30.09.2024 கம்யூனிஸ்ட் தலைவர் தோழர். சீனிவாசராவ் நினைவு தினமன்று மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துகண்ணன் தலைமையில் பட்டா கொடுக்கும் வரை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கருப்பன்னசாமி நகர் 37 குடும்பங்களுக்கு பட்டா தயார் நிலையில் உள்ளது எனவும் அடுத்து நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பட்டா வழங்கப்படும் எனவும் உடனே அதற்கான பயனாளியின் பட்டா நகல் ஒன்றையும் கொடுத்தனர்.இன்னும் 10நாளில் மாணிக்காபுரம் பகுதியில் வசிக்கும் 147 குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டாவை வகை மாற்றம் செய்து கொடுக்கபடும் என வாக்குறுதி அளித்தனர்.