வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் தொழில் மைய அலுவலகத்தின் செயல்பாடுகளை உலக வங்கியினர் நேரில் ஆய்வு
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாநிலத் திட்ட மேலாண்மை அலுவலர்கள் ஆய்வு
பல்லடத்தை அடுத்த அருள்புரத்தில் உள்ள கரைப்புதூர் ஊராட்சி அலுவலகம் அருகே திருப்பூர் மாவட்டத்தின் வாழ்ந்து காட்டுவோம் மதி சிறகுகள் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் தமிழக அரசின் வழிகாட்டுதலுடனும் , உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் மையத்தின் செயல்பாடுகளையும், இந்த மையத்தின் மூலம் பயனடைந்த பயனாளிகளின் உற்பத்தி பொருட்களையும் உலக வங்கியின் திறன் மேம்பாட்டு ஆலோசகர் ராமசுப்பிரமணியன் மற்றும் நிதி ஆலோசகர் ஸ்ரீவத்சன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். ஆய்வு செய்வதற்கு முன் வாழ்ந்து காட்டுவோம் மையத்தின் முன்பு மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரைப்புதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாநில திட்ட மேலாண்மை அலுவலர்கள் ராஜேஷ்குமார், ஜெகன் குமார், செந்தில்குமார் மற்றும் மாவட்ட செயல் அலுவலர், மாவட்ட திட்ட மேலாண்மை அலுவலர்கள், மதி சிறகுகள் தொழில் மைய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்