நள்ளிரவில் வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன் திருட்டு
இரண்டு சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது
திருப்பூர் மாவட்டம். பல்லடம் உட்கோட்டம். மங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சாமலாபுரத்தில் ஜம்மூ காஷ்மீரைச்சேர்ந்த மகான் சிங், மஞ்சித் சிங் என்ற இருவர் மற்றும் அவர்களது நன்பர்கள் சிலருடன் குடியிருந்து கொண்டு பிரதீப் என்பவரிடம் லோடுமேனாக கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மகான் சிங், மஞ்சித் சிங் இருவரும் சாமளாபுரம் AVAT பள்ளி அருகில் வேலை முடித்து நடந்து சென்ற போது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த அடையாள தெரியாத 04 நபர்கள் இவர்களை வழிமறித்து இருவரையும் இரும்பு கம்பியால் அடித்து காயப்படுத்திவிட்டு அவர்களிடமிருந்து ஒரு செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மங்கலம் காவல் ஆய்வாளர் அருள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் இருசக்கர வாகன எண்களைக்கொண்டு தீவிரமாக விசாரித்து வந்தனர்.செந்தேவிபாளையம் பிரிவு அருகே வாகன தணிக்கை செய்தபோது சந்தேகப்படும்படி அதே வாகன எண் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை நிறுத்த முற்பட்டபோது தப்பிச்செல்ல முயன்ற 04 நபர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் கோபிநந்தன், கோபிநாத் மற்றும் இரண்டு இளஞ்சிரார்கள் என்பதும் இவர்கள் நால்வரும் சேர்ந்துதான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை கைது செய்து அவர்கள் கொள்ளையடித்த செல்போன் மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனங்களையும் கைப்பற்றி விசாரனைக்குப்பிறகு மேற்கண்ட 02 எதிரிகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கின் இளஞ்சிரார்களையும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.