அரசு பேருந்து டயர் வெடித்து விபத்து எட்டு பேர் காயம்
அரசுப் பேருந்தின் டயர் வெடித்து இதனை வந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானதால் எட்டு பேர் காயம் அடைந்தனர்
பொள்ளாச்சியில் இருந்து மரத்தூள்களை ஏற்றிக்கொண்டு செவ்வாய்க்கிழமை அன்று பள்ளிபாளையம் நோக்கி வந்த லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த நாகராஜ் என்பவர் ஓட்டி வந்தார். ஈரோட்டில் இருந்து அரசு பேருந்தை சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த அரசு பேருந்தின் ஓட்டுநர் செல்வராஜ் பள்ளிபாளையம் நோக்கி ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்த பொழுது காவேரி ஆர் எஸ் பகுதியில் அமைந்துள்ள, தனியார் காகித ஆலைக்கு முன்பாக திடீரென அரசு பேருந்தின் முன்பக்க டயர் வெடித்துள்ளது.. இதனை அடுத்து நிலை தடுமாறிய அரசு பேருந்து எதிரே வந்து கொண்டிருந்த லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அரசு பேருந்தின் ஓட்டுநர் செல்வராஜ் , நடத்துனர் முருகன், லாரியின் ஓட்டுநர் நாகராஜ் மற்றும் பேருந்து பயணிகள் உள்ளிட்ட எட்டு பேர் காயம் அடைந்தனர்.இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும், நிலையில் ,இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது