சிவன்மலை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் - ஒரு கிலோ பிளாஸ்டிக்  கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம்

காங்கேயம் சிவன்மலை. இன்று இந்த ஊராட்சி சார்பில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமையில் சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Update: 2024-10-02 12:08 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுள்ளதுள்ளது சிவன்மலை. இன்று இந்த ஊராட்சி சார்பில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்குமார் தலைமையில் சிவன்மலை ஊராட்சி மன்ற தலைவர் முன்னிலை வகித்தார்.காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காங்கேயம் அருகே சிவன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒரு கிலோ பிளாஸ்டிக்  கொடுத்தால் ஒரு கிலோ அரிசி வழங்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் தனியார் அமைப்பின் உதவியுடன்  சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். சிவன்மலை பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர்களை சுத்திகரிப்பு செய்து அந்த நீரை வளர்க்கப்படும் மரங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சிவன்மலை ஊராட்சியில் நர்சரி அமைக்கப்பட்டு அந்த நர்சரி மூலமாக உருவாகும் மரக்கன்றுகளை காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றங்களுக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுபோல் சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வரும் சிவன்மலை ஊராட்சி மன்றத்தை மாவட்டத்தின் சிறந்த ஊராட்சி என தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாகவும் மேலும் தமிழக அரசால் சிறந்த ஊராட்சி என்ற விருதுக்கு திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழக அரசுக்கு பரிந்துரைக்க பட்டுள்ளதாகவும் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஷ் குமார் தெரிவித்தார். தூய்மை மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பாலியல் தொல்லையில் இருந்து காப்பாற்றுவது மற்றும் எய்ட்ஸ், பால்வினை நோய்கள் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் கிராம சபை கூட்டத்தில் சிவன்மலை ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் இரவு நேரத்தில் தோட்டத்தில் உள்ள ஆடுகளை தாக்கும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. காங்கேயம் தாலுகா முழுவதிலும் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஆடுகளை தாக்கும் வெறி நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் மனுவாக புகார் கொடுத்தனர். மேலும் கோயம்புத்தூர் முதல் வெள்ளகோவில் வரை பாரத் பெட்ரோலியத்தின் IDBL எண்ணெய் குழாய் திட்டம் 25 ஆண்டுகளுக்கு மேலாக விவசாய நிலங்கள் வழியாக செல்வதால் விவசாய நிலங்களில் மதிப்பு முற்றிலும் குறைந்து விடுகின்றது என்று முன்னதாக அமைக்கப்பட்ட குழாயையும் தற்போது புதிதாக அமைக்கவுள்ள குழாயையும் சாலையின் ஓரமாக மாற்றி அமைக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மனு கொடுத்தனர்.

Similar News