நாமக்கல்லில் தமிழ்நாடு முதலமைச்சர் வருகை. அதற்காக இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என் ராஜேஷ் குமார் முன்னிலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்/நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அவர்கள் தகவல்.
நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டை மேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி இடம் தேர்வு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று முடிவுற்ற புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டப் பணிகளை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் அக்டோபர் 2024 இல் நேரடியாக வருகை தந்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்க உள்ளார் அதன் தொடர்ச்சியாக நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மைகுட்டை மேடு, லட்சுமி திருமண மண்டபம் அருகில் இன்று பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி இடம் தேர்வு செய்யும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர்.ஆர்.பார்தீபன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சிவக்குமார், நாமக்கல் வட்டாட்சியர் சினிவாசன், நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.