சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்த புதிய அலுவலக கட்டிடம்..
திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பத்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டிக்கு கலைவாணன் திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பத்தூர் ஊராட்சியில் ரூபாய் 22. 65 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழாவானது ஒன்றிய குழு தலைவர் புலிவலம்.தேவா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன் கலந்து கொண்டு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புதுப்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து கல்வெட்டினை திறந்து வைத்தார்.