ஆகாரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எம்.பி. பங்கேற்பு

ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Update: 2024-10-03 01:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆரணி மக்களவை உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார், மேற்கு அரணி ஒன்றிய குழுத் தலைவர் பச்சையம்மன் சீனிவாசன் முன்னிலை வகித்தார் ஊராட்சி தலைவர் செல்வம் வரவேற்றார். நிகழ்ச்சியில் எம்பி பேசியது: தமிழக முதல்வர் கிராம புறத்திற்கு சாலை வசதி, கால்வாய் வசதி, ஏரி மேலாண்மை, நீர் பாசன வசதி, உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செய்து வருகிறார். படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், உள்ளிட்ட திட்டங்கள் தமிழக அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று பேசினார் மேலும் கூட்டத்தில் 6 பேருக்கு வீடு கேட்டு மனு கொடுத்ததுள்ளதை அதிகாரிகள் உடனடியாக விசாரணை செய்து வீடு கட்ட ஆணை வழங்க உத்தரவிட்டார். தாய், தந்தை இழந்த குழந்தைகளுக்கு ஆரணி எம்.பி அவரது சொந்த பணம் ரூ.50 ஆயிரம் காசோலையை அவர்களது கல்வி நிதிக்காக வழங்கினார், மேலும் ஒரு பயனாளிக்கு வீட்டின் கூரை சேதமானதை சரிசெய்து தரும்படி மனு கொடுத்ததின்பேரில் சொந்த பணம் ரூ.5ஆயிரம் வழங்கினார். பின்னர் ரூ.5.50லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட நாடக மேடையையும், 9 லட்சத்து 90ஆயிரம் மதிப்புள்ள சுகாதார கட்டிடத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் கௌரி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், திமுக தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், நகர்மன்ற தலைவர் ஏ.சி.மணி, ஒன்றிய செயலாளர்கள் துரை மாமது, எஸ்.மோகன், மாவட்ட கவுன்சிலர் குமரேசன், கண்ணமங்கலம் நகரசெயலாளர் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர் தசரதராமன் உள்ளிட்டோர் உள்ளனர்.

Similar News