சத்தியில் பருவ மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தயார்
சத்தியில் பருவ மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தயார்
சத்தியில் பருவ மழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை தயார் சத்தியில் பருவ மழையை சமாளிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர். வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் துவங்கி நவம்பர் மற்றும் டிசம்பர் வரை பெய்து வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவுரையின்படி நெடுஞ்சாலைத்துறை கோபிசெட்டிபாளையம் நெடுஞ்சாலைத்துறை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், சத்தி (நெ), க(ம)ப, உட்கோட்டத்தில் தயார் நிலையில் போதுமான மணல் மூட்டைகள், மண் அள்ளும் இயந்திரங்கள், மரங்களை விரைவாக வெட்டி அகற்றும் இயந்திரங்கள், சவுக்கு மரங்கள், இதர கருவி, உபகரணங்கள் மற்றும் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்