கயப்பாக்கம் ஏரிக்கரையில் பாஜக சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.

ஆரணி, அக் 4 .ஆரணி அடுத்த அடையபலம் ஊராட்சியைச் சேர்ந்த கயப்பாக்கம் ஏரிக்கரையில் பாஜக சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-10-04 03:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி, திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், ஆரணி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அடையபலம் ஊராட்சியைச் சேர்ந்த கயப்பாக்கம் ஏரிக்கரையில் பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜக கட்சி சார்பில் சேவை தினத்தை கொண்டாடப்பட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு ஆரணி வடக்கு ஒன்றியம், ஒன்றிய தலைவர் எஸ்.குணாநிதி தலைமையில் பனை விதை நடவு செய்யப்பட்டது. இதில் ஒன்றிய பொதுச் செயலாளர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் சிவராமன், ஒன்றிய நிர்வாகி தாமோதரன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன், நிர்வாகிகள் பாபு, ஞானவேல், ஜெயம் ஆகியோர் இணைந்து கயப்பாக்கம் ஏரி முழுவதும் பனை விதை நடவு செய்தனர்.

Similar News