சேவூர் ஏரிக்கரையில் ஆரணி அரசு மகளிர் பள்ளி மாணவிகள் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி.
ஆரணி அடுத்த சேவூர் ஏரிக்கரையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் நாட்டுநலப்பணிதிட்ட முகாம் நிறைவு நாள் முன்னிட்டு பனை விதைகளை நட்டனர்.
ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலநலப்பணிதிட்ட மாணவிகள் சேவூரில் நாட்டு நலப்பணிதிட்ட முகாமினை நடத்தி வருகின்றனர். செப் 28 அன்று துவங்கி தினமும் பள்ளி தூய்மை செய்தல், சேவூர் ஜெயின் கோயில் தூய்மை செய்தல், மரக்கன்று நடுதல் ஆகியவற்றை செய்து வந்தனர். இந்நிலையில் அக் 4 நிறைவு நாள் முன்னிட்டு சேவூர் ஏரியில் பள்ளம் தோண்டப்பட்டு பனை விதைகளை நட்டனர். இதில் ஆரணி அரிமா சங்க தலைவர் மோசஸ் தலைமை தாங்கினார். அனைவரையும் சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முருகன் வரவேற்றார். அரிமா சங்க துணை ஆளுநர் உதயசூரியன், வேலூர் டான்போஸ்கோ பள்ளி தலைமையாசிரியர் பலவேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். மேலும் இதில் அரிமா சில்க் சிட்டி மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ்பாபு, பி.நடராஜன் அரிமா சங்க செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பரசுராமன், அரிமா சங்க நிர்வாகிகள் எம்.என்.சேகர், சுகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் நாட்டுநலப்பணிதிட்ட அலுவலர் கலைவாணி நன்றியுரை ஆற்றினார்.