மணவாடி- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

மணவாடி- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது.

Update: 2024-10-05 07:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மணவாடி- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டம் ,மணவாடி, செல்வநகர் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில மையத்தின் சார்பில், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு அளித்த வாக்குறுதிபடி புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, காலி பணியிடங்கள் அனைத்தையும் நிரப்புவதாக கூறிய வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி முதல் மாநில மாநாடு மாநிலத் தலைவர் S.தமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. இன்று துவங்கி நாளை வரை நடைபெறும் இந்த மாநாட்டில் வரவேற்பு குழு தலைவராக தமிழ்வாணன், முன்னாள் மாநில தலைவர் R.தமிழ்ச்செல்வி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்க இலக்கியத்தில் துணைத் தலைவர் சதீஷ் ரானா, முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினர் பார்த்தசாரதி ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் முன்னாள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மாநில பொதுச் செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாநில அளவிலான நிர்வாகிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில்,முதல் நிகழ்வாக கொடியேற்றமும், தியாகிகளுக்கு அஞ்சலியும் செலுத்தி மாநாட்டை துவக்கினர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை மகளிர் மாநாடு மாநில துணை தலைவர் சாந்தகுமாரி தலைமையில் நடைபெற உள்ளது. நாளை இரண்டாவது நாளாக நடைபெறும் மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News