காங்கேயம் அருகே மனைவியை கிணற்றில் தள்ளிவிட்டு கணவன் குழந்தையுடன் மாயம்
காங்கேயம் அருகே மனைவியை கிணற்றில் தள்ளிவிட்டு கணவன் குழந்தையுடன் மாயம் காங்கேயம் காவல்துறை விசாரணை
காங்கேயம் அடுத்துள்ள சிக்கரசம்பாளையத்தில் உள்ள தனியார் தேங்காய் களத்தில் மேற்குவங்காளம் கஃபூர் அஞ்சல், சிஎல்ட கிராமத்தை சேர்ந்த அபிபுல்லாகான் அவரது மனைவி ஷைனாகான் (25) குழந்தை சஞ்சனா கான் உடன் கடந்த 3 மாதங்களாக தங்கி வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ஷைனாகான் இங்கு வேலை செய்ய பிடிக்காமல் சொந்த ஊருக்கு சென்று விடலாம் எனக் கூறி வந்ததாகவும் இந்நிலையில் உமா டிரேடிங் கம்பெனியில் இருப்பு பணம் ரூ.10000 ரூபாய் இருந்ததாகவும் அந்த பணத்தை கடந்த 29.09.24 ம் தேதி வாங்கி கொண்டு அன்று மாலை மேற்கண்ட கம்பெனியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதாக மனைவி மற்றும் குழந்தையை அழைத்து கொண்டு அபிபுல்லாகான் சென்றதாகவும் கூறப்படுகின்றது. இதனிடையே கணவன் மனைவியிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. சிக்கரசம்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் மனைவியை தள்ளி விட்டு பெண் குழந்தையுடன் அங்கிருந்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. பின்னர் நேற்று பழனிச்சாமி என்பவர் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது கிணற்றில் சத்தம் கேட்டதாகவும் உடனே சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத பெண் இருந்தது தெரியவந்தது. காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் மூலம் சாய்னகானை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் பெற்றுமேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காங்கேயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.