காங்கேயம் நகராட்சி அலுவலகம் எதிரே அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்
காங்கேயம் நகராட்சிக்கு எதிரே வீட்டு வரி உயர்வு,மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத திமுக அரசை கண்டித்து அதிமுக நகர கழக செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய கழக செயலாளருமான NSN. நடராஜ் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது .
காங்கேயம் நகராட்சி அலுவலகத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காங்கேயம் நகரம், காங்கேயம் ஒன்றியம், மற்றும் குண்டடம் வடக்கு ஒன்றியத்தை சேர்ந்த பொறுப்பாளர்களும், நிர்வாகிகளும் பங்கேற்றனர். நகர கழக செயலாளர் வெங்கு.ஜி. மணிமாறன், மற்றும் காங்கேயம் ஒன்றிய கழகச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான N.S.N.நடராஜ் தலைமையில் குண்டடம் வடக்கு ஒன்றிய செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலையில் இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்றது. வீட்டு வரி உயர்வு, குடிநீர் கட்டணம் உயர்வு,தொழில் வரி உயர்வு,மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் விரோத திமுக அரசை கண்டித்தும் 40மாதகாலமாக தமிழகம் பல்வேறு இன்னல்களை சந்திப்பது மட்டுமில்லாமல் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் மக்கள் உயிர்வாழ்ந்து கொண்டுள்ளதாகவும் ,பெண் காவல்துறை அதிகாரிகளுக்கே உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில் இந்த 40 மாத ஆட்சியே சாட்சியாக உள்ளதாகவும் தெரிவித்து பின்னர் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக பொருளாளர் K.G.K. கிஷோர் குமார், மாவட்டக் கழக துணைச் செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் செல்வகுமார், ஒன்றிய அவைத்தலைவர் மைனர்.T.பழனிச்சாமி, மாவட்ட காங்கேயம் நகர கழக பொறுப்பாளர்களும், வார்டு கழகச் செயலாளர்களும், சார்பு அமைப்புச் பொறுப்பளர்களும், பூத்து கமிட்டி பொறுப்பாளர்களும், மற்றும் கழக முன்னோடிகள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.