பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-10-08 12:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் மற்றும் மோகனூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், திருமலைப்பட்டியில் ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, திருமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மருந்து பொருட்களின் இருப்பு, நோயாளிகளின் வருகை பதிவேடு, அளிக்கப்படும் சிகிச்சைகள் விபரம், சிகிச்சை பெற்று வரும் கர்ப்பிணித்தாய்மார்களின் விபரம், மழை கால நோய்த்தொற்றுகளுக்கான மருந்துகளின் இருப்பு உள்ளிட்டவை குறித்து மருத்துவ பணியாளர்களிடம் கேட்டறிந்து, சிகிச்சை பெற வருகை புரிந்திருந்த நோயாளிகளுடன் கலந்துரையாடினார். மேலும், திருமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயர்வேத மருத்துவ பிரிவில் ஆய்வு மேற்கொண்டு, ஆயுர்வேத மருத்துகளின் இருப்பு அவற்றின் பயன்பாடு, சிகிச்சை விபரம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, வீசாணத்தில் புதியதாக துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பரளியில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு பணிக்கூடத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, நாமக்கல் மாவட்டம், பொம்மைகுட்டை மேடு பகுதியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் முன்னிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Similar News