தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
100 நாள் திட்டத்தை 150 நாளாக உயர்த்தி நிதி ஒதுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆரணி.அக்.8 செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் தேர்தல் அறிக்கை 42, 464, 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவது கிராம மேம்பாட்டு திட்டம் நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி மீன்பிடி வலை போட்டு நூதன ஆர்ப்பாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தமிழக கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் 100 நாள் திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கிராமப்புறங்களில் சிறு சிறு பணிகளை கிராம பஞ்சாயத்து டெண்டர் விட்டு நடைமுறைப்படுத்த கிராம மேம்பாட்டு திட்டம் தேர்தல் அறிக்கை 464 நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மாறாக மெட்ரோ திட்டத்திற்கு முதலமைச்சரே ஓன்றிய அரசிடம் சென்று நேரடியாக பிரதமரிடம் பேசி நிதி ஒதுக்கி மெட்ரோ திட்டத்திற்கு டெண்டர் கமிஷன் மூலம் லாபம் ஈட்டுவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது கிராமபுற பொருளாதாரம் மேம்பட கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என தேர்தல் அறிக்கை கூறப்பட்ட நிலையில் மண்வெட்டி பானால் ஆகியவற்றை வலை வீசி தேடி தேர்தல் அறிக்கையை கண்டுபிடிப்பதாக விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.