பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தனி நபர் ஆக்ரமிப்பு மீட்டு தர கோரி பொதுமக்கள் தனி வட்டாச்சியரிடம் மனு அளித்தனர்

பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தனி நபர் ஆக்ரமிப்பு மீட்டு தர கோரி பொதுமக்கள் தனி வட்டாச்சியரிடம் மனு அளித்தனர்

Update: 2024-10-09 12:37 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை தனி நபர் ஆக்ரமிப்பு மீட்டு தர கோரி பொதுமக்கள் தனி வட்டாச்சியரிடம் மனு அளித்தனர் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் , ஆதிதிராவிடர் நலம், தனி வட்டாச்சியரிடம், கோபி, எல்லமடை கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து தங்கள் பகுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினரால் கடந்த 25.09.1992 ஆண்டு சர்வே எண் 230 ல் உள்ள அரசு நிலத்தை சுமார் 80 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை இடங்களாக வழங்கியது. இங்கு பொது பயன்பாட்டிற்கென விடப்பட்டிருந்த காலியிடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து கம்பி வேலி அமைத்துள்ளார். அவரிடம் இருந்து நிலத்தை மீட்டு அந்த இடத்தில் விளையாட்டு திடலோ, திருமண மண்டபமோ, சமுதாய நலக்கூடமோ கட்டி தர வேண்டும் என தனி தாசில்தார் இடம் மனு அளித்தனர். பொதுமக்களிடம் தாசில்தார் மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு அனுப்பி மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Similar News