அதிமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர்

Update: 2024-10-09 13:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி, அக்.09 திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் நேற்று நடந்தது. அனக்காவூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வே‌குணசீலன் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் கழக அமைப்பு செயலாளருமான முக்கூர் என்.சுப்ரமணியன், கழக அமைப்பு செயலாளரும் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான வாலாஜாபாத் பா.கணேசன், கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்கள். ஆலோசனை கூட்டத்தில் அனக்காவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.துரை, ஒன்றிய செயலாளர்கள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், வயலூர் ராமநாதன், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் முனுசாமி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பூக்கடை கோபால், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ராணி பெருமாள், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் பி.அருண்,அவைத்தலைவர்கள் சேகர், செபாஸ்டின் துரை, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பெருமாள், வாசுதேவன், துளசிராமன், சங்கர், பொன்னுரங்கம், குணபாலன், எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News