ஹான்ஸ் ,குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்
ஆரணி.அக்.9 சேத்துப்பட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மது ஹான்ஸ், குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள்சீல் வைத்தனர் .
சேத்துப்பட்டு செஞ்சிசாலை மாரியம்மன் கோவில் தெருவில் வட மாநிலத்தவரின் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்ஸ் குட்கா போன்ற பொருட்களை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சிறப்பு படை போலீசார்சேத்துப்பட்டு செஞ்சி சாலை மாரியம்மன் கோவில் தெருவில்உள்ள பலசருக்கு கடையில்திடீர் ஆய்வு செய்த போது ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்த ரண சோட ராம், 34, ஜித்தன் குமார் ஆகியோர்வியாபாரம் செய்த போது சிறப்பு போலீசார் கையும் களமாக பிடித்து சேத்துப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.சேத்துப்பட்டு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் போளூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் நடத்தினர் அதனை தொடர்ந்து நேற்றுஉணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி சேத்துப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார்மற்றும் போலீசார் கடைக்கு சென்றுமீண்டும் ஆய்வு செய்து சீல் வைத்தனர்.மேலும் அரசு உத்தரவு வரும் வரை இக்கடையை திறக்க கூடாது திறந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.