கரூரில் களைகட்டும் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை.
கரூரில் களைகட்டும் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை.
கரூரில் களைகட்டும் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை. ஆண்டுதோறும் ஆயுத பூஜை நிகழ்ச்சியை அனைவரும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். தங்களுக்கு வாழ்வளிக்கும் தொழில் ரீதியான உபகரணங்களை தூய்மைப்படுத்தி, பொட்டிட்டு, அலங்காரம் செய்து வணங்கினால் தங்களது வாழ்வு செழிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. இதன் அடிப்படையில் இன்று மாலை ஆயுத பூஜை சிறப்பாக செய்வதற்காக, பூஜை பொருட்களான வாழை கன்று, வாழை இலை, தென்னங்கீற்று தோரணம், மா இலை, வெள்ளை பூசணி, வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் விவசாயிகள் குவித்து வைத்து விற்பனையில் ஈடுபட்டனர். பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் இருந்ததால், பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்றவாறு பொருட்களை வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை கலை கட்டியது.