பழையபாளையம் ஸ்ரீ நஞ்சுண்டேசுவரர் சிவாலயத்தில் நாளை அன்னாபிஷேகம்!

அன்னாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால், கோடி லிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

Update: 2024-11-14 06:48 GMT
நாமக்கல் அடுத்து உள்ள அலங்காநத்தம் பிரிவு ரோடு சேந்தமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள "பழையபாளையம் கிராமம்" சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி நீர் பெருகி வழிந்து ஓடும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில்,நாளை (நவம்பர் -15) வெள்ளிக்கிழமை ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி, நஞ்சுண்டேசுவருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. மதியம் 3 மணியளவில் ஸ்ரீபார்வதி அம்பிகை, விநாயகர், முருகன், மஹாலக்ஷ்மி,காலபைரவர்,சூரியன். சந்திரன் நவக்கிரஹம் மற்றும் சனீஸ்வரன். கோஷ்ட பரிவாரமாகிய நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா,துர்க்கை உடன் சண்டிகேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு நஞ்சுண்டேசுவருக்கு அன்னம், காய்கறி மற்றும் பழங்களால் அபிஷேகம் செய்து, அன்னாபிஷேக தரிசனம் நடக்கிறது.இரவு 7 மணிக்கு மகா தீபாரதனை செய்து, சுவாமியின் திருமேனியில் உள்ள அன்னம் கலைந்து திருக்கோவிலை வலம் வந்து அருகில் உள்ள ஏரியில் கரைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
பூஜைக்கும் அன்னதானத்திற்கும் தேவையான அரிசி, பால், தயிர், காய்கனி வகைகள், பருப்பு. புளி, நெய், வெண்ணெய், தேங்காய் மற்றும் அபிஷேக பொருட்கள் மற்றும் நன்கொடைகளை முன்னதாகவே ஆலயத்தில் வழங்குமாறு சிவபக்தர்களை வேண்டுகிறோம். ஆலயத் தொடர்புக்கு: 70101 41068, 97879 28473.
அன்னாபிஷேகத்தில் பங்கேற்று தரிசனம் செய்தால், கோடி லிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி, அர்ச்சகர்கள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

Similar News