இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம்

இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம்

Update: 2024-10-12 14:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பின் அவசர ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை 12/10/24 காலை 8 மணி அளவில் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 1) இராசிபுரம் பேருந்துநிலைய மாறுதலை ரத்து செய்யக்கோரி ராசிபுரம் பேருந்து மீட்பு கூட்டமைப்பின் சார்பிலும் வியாபார சங்கங்களின் சார்பிலும் சேவை அமைப்புகள் சார்பிலும், தொடர்ச்சியான பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தும் மாவட்ட நிர்வாகமும் நகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் மக்களுடைய உணர்வை புரிந்து கொள்ளாமல் ஜனநாயக விரோத சர்வாதிகாரப் போக்கில் பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஒப்பந்தபுள்ளி கோரியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 2),மாவட்ட ஆட்சித் தலைவராக மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்பட்டுக்கொண்டிருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இராசிபுரம் நகர மக்களின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 3),வாக்களித்த இராசிபுரம் நகர மக்களுக்கு துரோகம் செய்யும்நகர் மன்ற தலைவர் கவிதா சங்கர், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன்,மாநிலங்களவை உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளர் கே ஆர் என் இராஜேஸ்குமார், நகர்புற மேம்மாட்டு துறை அமைச்சர் ஆகியோர்களின் மக்கள் விரோத சர்வாதிகார போக்கை கண்டித்தும், 4).பேருந்து நிலையம் கட்டுவதற்கு எந்தவித நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல் நகராட்சி நிர்வாக இயக்குனர் சென்னை அவர்களால் கோரியிருக்கும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வருகிற 16/10/24. புதன்கிழமை காலை10.00 மணி அளவில் இராசிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 14 10 24 திங்கட்கிழமை அன்று ராசிபுரம் நகரம் முழுவதும் ஒப்பந்தபுள்ளி கோரி இருப்பதை ரத்து செய்யக்கோரி நகராட்சி அலுவலகத்தின் முன்பு நடைபெறவிற்கும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொதுமக்களை போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டி தெருமுனைப் பிரச்சாரம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தெருமுனை பிரச்சாரம் நடைபெறும் இடங்கள் தெரிவித்துள்ளனர். அஇஅதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம்,சாமுண்டி தியேட்டர் அருகில், ராம் நகர், புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலும், மறுமலர்ச்சி திமுக சார்பில் இரட்டை விநாயகர் கோயில் அருகில் 4.30 மணியளவிலும் சாவடி அருகில் 7.30 மணியளவிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விஜயலட்சுமி தியேட்டர் அருகிலும் பாமக சார்பில் 5.00 To 6.00 மணிக்கு காந்தி மாளிகை 6.00 to 7.00 மணிக்கு கோனேரிப்பட்டி பிஜேபி சார்பில் 7.00 மணிக்கு காட்டூர் பால் சொசைட்டி அருகிலும், 8.00 மணிக்கு எல்லை மாரியம்மன் கோவில் அருகிலும், தேமுதிக சார்பில் பழனியம்மாள் ஹாஸ்பிடல் நால்ரோடு அருகில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 6.00 மணிக்கு கருப்பனார் கோயில் 7.00 மணிக்கு சித்தி விநாயகர் கோயில் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 7.00 மணிக்கு இந்திரா காலனி 8.00 மணிக்கு கிழக்கு தெரு அம்பேத்கர் சிலை அருகில். தமிழக வெற்றி கழகம் சார்பில் நெசவாளர் காலனி, அண்ணமார் சந்து இரு இடங்களிலும், நாம் தமிழர் கட்சி சார்பில் 4.00 மணிஅளவில் சைனிகர் திருமணம் மண்டபம் அருகிலும். SDPI சார்பில் 5.00 மணி அளவில் முள்ளுவாடி பழனியப்பா வாட்டர் சர்வீஸ் அருகிலும் 6.00 மணி அளவில் அச்சுக்கட்டி தெரு, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 6.00 மணியளவில் அங்காளம்மன் கோயில் தெரு. நகராட்சி கடை பொதுநல வியாபாரிகள் சங்கம் சார்பில் 10.00 மணியளவில் பேருந்துநிலைய வளாகம் TMDk சார்பில் LIC அருகிலும நடைபெறுகின்ற தெருமுனை பிரச்சாரத்திற்கும், பேருந்து நிலைய ஒப்பந்த புள்ளி கோரியிருப்பதை ரத்து செய்ய கோரி 16/10/24 காலை 10.00 மணியளவில் ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தின் முன்பு நடைபெறுகின்ற ஆர்ப்பாட்டத்திலும் வியாபார பெருமக்களும் தொழிலாளர்களும் ராசிபுரம் நகர மக்களும் அனைத்து அரசியல் கட்சியினரும் திரளாக கலந்து கொண்டு ஆதரவளிக்கும்படி இராசிபுரம் பேருந்துநிலைய மீட்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.

Similar News