ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அன்பளிப்பாக பீரோ உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய தொழிலதிபர்கள்
பீரோ, மானிட்டர்கள், மூன்று சக்கரவண்டி போன்ற உபகரணங்களை மருத்துவமனை மருத்துவர் பிரேமலதாவிடம் அன்பளிப்பாக அளித்தனர்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு வட்டார மருத்துவமனைக்கு பீரோ, மானிட்டர்கள், மூன்று சக்கரவண்டி போன்ற உபகரணங்களை மருத்துவமனை பயன்பாட்டுக்கு ஆண்டிபட்டியில் உள்ள தொழிலதிபர்கள் கவுன்சிலர் பி.சரவணக்குமார் தலைமையில் மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரேமலதாவிடம் அன்பளிப்பாக அளித்தனர். அப்போது தொழிலதிபர்கள் பேரூராட்சி 14-வது வார்டு கவுன்சிலர் பி. சரவணக்குமார், ஆர். சிவக்குமார், ஜி.பெரியசாமி, வி.நல்லமாயன், கே.அசோகன், டி. முருகானந்தம், ஜி.நாகமலை, எம்.தேவா, சி.வி.சுப்பிரமணியன், (ஓட்டுனர் ) கே.நாகராஜ் (காவல்), எம்.மணிகண்டன் (காவல்) மற்றும் மருத்துவர்கள் ஞான சுந்தரம், லலிதா, சுரேஷ்குமார், ரெஜினால்டு, தலைமை செவிலியர் மணிமேகலை, பொது பிரிவு மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை மருத்துவர் பிரேமலதா மருத்துவ தளவாடப்பொருட்களை வழங்கியவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டார்.