ஆண்டிபட்டி அருகே தெரிஞ்சா காதலிங்க... படப்பிடிப்பு நடைபெற்று
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிளப் முருகன் கிளாப் அடிக்க, முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் கேமிராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதியில் அக்ரி லேண்ட் பிலிம்ஸ்சின் தெரிஞ்சா காதலிங்க... படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பு நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிளப் முருகன் கிளாப் அடிக்க, முன்னாள் எம்.எல்.ஏ., ஆசையன் கேமிராவை ஆன் செய்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆண்டிபட்டி 5-வது வார்டு குமரபுரம் பகுதியில் சிறுவர்கள் கிரிக்கெட் ஆடுவது போல் காட்சி எடுக்கப்பட்டது. இதில் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவை கோல்டு சந்துரு கவனிக்க, மகேந்திரன் இசையமைக்க, கதை - திரைக்கதை - வசனம் - தயாரிப்பு மற்றும் இயக்கத்தை எம்.கஜேந்திரன் பி.ஏ. ஏற்கிறார். அதுபோல படத்தின் இணை தயாரிப்பாளராக பேச்சியம்மன் கே.எஸ்.சுப்புராஜ், ஜெ. சுமதி மைக்கேல் ராஜ் ஆகியோர் உள்ளனர். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தொழிலதிபர்கள் பி.ஆர்.கண்ணன் மற்றும் மதுரை மைக்கேல்ராஜ் நடித்து வருகின்றனர்.